17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan February 26, 2021, 10:39 am

மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கம் அருகில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், டாஸ்மாக்கில் பணிபுரிந்து உயிரிழந்த வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், டாஸ்மாக்கில் மாற்றுத் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்வதை டாஸ்மாக் நிர்வாகம் தடோக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!