17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை டவுன்ஹால் ரோட்டில் மின்னணு கடையில் பயங்கர தீ விபத்து

மதுரை டவுன்ஹால் ரோட்டில் மின்னணு கடையில் பயங்கர தீ விபத்து

எழுதியவர்: mohan February 25, 2021, 11:50 am

டவுன்ஹால் ரோடு அருகே மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் 200 கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.இந்நிலையில்  வடக்கு பெருமாள் தெப்பம் திடீரென ஒரு மின்னணு கடையில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.உடனடியாக டவுன் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென 15க்கும் மேற்பட்ட கடைகளில் பற்றி எரிந்தது. 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்னணு பொருட்கள் எரிந்து சாம்பலாயின.இந்த விபத்து குறித்து திடீர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!