18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையின் பழமையான அடையாளங்களில் ஒன்றான கலங்கரை விளக்கத்திற்கு மீண்டும் பார்வையாளர்கள் அனுமதி..

கீழக்கரையின் பழமையான அடையாளங்களில் ஒன்றான கலங்கரை விளக்கத்திற்கு மீண்டும் பார்வையாளர்கள் அனுமதி..

எழுதியவர்: ஆசிரியர் February 24, 2021, 6:56 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ராமேஸ்வரம், பாமன் பகுதி என மொத்தம் மூன்று கலங்கரை விளக்கங்கள் உள்ளது. தனுஷ்கோடி பகுதியில புதிய கலங்கரை விளக்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது அது இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் கீழக்கரை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கு கடந்த 25 ஆண்டுகளாக பொது மக்கள் பார்வையிட அனுமதிக்காமல் மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் மீண்டும் வரும் வெள்ளிக்கிழமை 26.2.2021 முதல் பொது மக்கள் பார்வையிட கீழக்கரை கலங்கரை விளக்கம் திறக்கப்படும் என்று கலங்கரை விளக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு சில விதிமுறைகள் கலங்கரைவிளக்கம் சார்பில் தெரிவித்துள்ளது. இதைப்பற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டபோது மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன் பகுதியிலுள்ள கலங்கரை விளக்கங்களை மக்கள் பார்வையிட முடியாது, ஆகையால் மாவட்ட மக்கள் அனைவரும் கீழக்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மட்டும் தான் மேலே ஏறி பார்வையிட முடியும். இதனால் கீழக்கரை மக்கள் மட்டுமன்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் கலங்கரை விளக்கத்திற்கு வந்து செல்ல மிகவும் ஆர்வமாக உள்ளார்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!