18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த விழா கொண்டாடப்பட்டது.

அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த விழா கொண்டாடப்பட்டது.

எழுதியவர்: mohan February 24, 2021, 6:28 pm

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியான வண்ணாரப்பேட்டை (19வது வார்டு) தெருவில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி உத்தரவின்பேரில் உசிலம்பட்டி அதிமுக நகரசெயலாளர் பூமாராஜா தலைமையில் 19வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் லதாராமமூர்த்தி ஏற்பாட்டில் கிளை செயலாளர்கள் ரவிசாந்தி மற்றும் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 19வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் லதாராமமூர்த்தி பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!