17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள முருகன் கோவில் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 73வது ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி இனிப்புக்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள முருகன் கோவில் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 73வது ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி இனிப்புக்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

எழுதியவர்: mohan February 24, 2021, 12:08 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள முருகன் கோவில் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வதுபிறந்த நாளையொட்டி கழக அமைப்பு செயலாளாரும், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான இ.மகேந்திரன் தலைமையில் நகர செயலாளர் குணசேகரபாண்டியன் முன்னிலையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவரும்,தெற்கு ஒன்றியசெயலளாருமான மலேசியா பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ்பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராஜ், எம்ஜிஆர் மன்ற நிர்வாகி ஏகேடி ராஜா, ஈச்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதி ராஜா, மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!