17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம்; அபுபக்கர் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

கடையநல்லூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம்; அபுபக்கர் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

எழுதியவர்: mohan February 24, 2021, 11:01 am

கடையநல்லூரில் ரூ.15 இலட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் திறந்து வைத்தார்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே குழந்தைகளுக்கான அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 8 இலட்சம் மதிப்பில் அமைத்து பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதேபோல் பிலால் பள்ளிவாசல் எதிர்புறம் உள்ள வாறுகாலில் 3 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் மூடியும், நயினார் முஹம்மது பள்ளிவாசல் மையவாடியில் 4 இலட்சம் மதிப்பில் சுற்றுச்சுவரும் அமைத்து திறந்து வைத்தார். பின்னர் இக்பால் நகர் தெப்பக்குளம் சுற்றி 15 இலட்சம் மதிப்பில் நடைபாதை அமைக்கும் பணியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் இக்பால், கடையநல்லூர் நகர தலைவர் செய்யது மசூது, ரஹ்மத்துல்லா, அங்கன்வாடி பணியாளர்கள், ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!