17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் ஆதார் சேவை மையத்தை மீண்டும் திறக்கக்கோரி மமக வினர் முற்றுகை..

நெல்லையில் ஆதார் சேவை மையத்தை மீண்டும் திறக்கக்கோரி மமக வினர் முற்றுகை..

எழுதியவர்: mohan February 24, 2021, 10:48 am

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தபால் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட்டது. இந்த சேவை மையமானது இரண்டு நாட்கள் மட்டுமே செயல்பட்டதால் பொதுமக்கள் ஆதார் அட்டையில் பெயர் மாற்றம்,போட்டோ, முகவரி திருத்தம் செய்ய மிகவும் சிரமத்தை எதிர்நோக்கினர். இந்நிலையில் இன்று மனிதநேய மக்கள் கட்சியினர் பகுதி தலைவர் தேயிலை மைதீன் தலைமையில் திரண்டு வந்து மேலப்பாளையம் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது காவல்துறை முன்னிலையில் தபால் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி 24/02/2021 முதல் ஆதார் சேவை மையத்தை செயல்படுத்துவதாக உறுதியளித்ததின் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதில் மாவட்ட துணை செயலாளர் அ.காஜா,பகுதி நிர்வாகிகள் AR பாஷா,அப்துல் அஜீஸ்,குதா முகம்மது,MTS முகைதீன்,MTS ஞானியார்,கருப்பசாமி மற்றும் பொதுமக்கள் இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!