14 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில் உலக சிந்தனை நாள் கொண்டாட்டம்

பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில் உலக சிந்தனை நாள் கொண்டாட்டம்

எழுதியவர்: mohan February 22, 2021, 12:48 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கல்வி மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் தரடாப்பட்டு, அரசு உயர்நிலைப்பள்ளியில் சிந்தனை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் .வெங்கடேஷ் முன்னிலை வகித்தார், பள்ளி தலைமையாசிரியர் .மு. சேகர் தலைமை வகித்தார் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாரண ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாரணிய ஆசிரியை சரண்யா செய்திருந்தனர்.மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்  ராம் மோகன் , ராமமூர்த்தி, லட்சுமிகாந்தன்,சுமதி, பரிமளா, தீபா, பழனி, சரவணன், உடற்கல்வி ஆசிரியர் தினகரன், ஊராட்சி மன்ற தலைவர் ஷகிலா சுப்பராயன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஷர்புதீன்,அலுவலக பணியாளர்கள் கோவிந்தராஜ், வித்யா கலந்து கொண்டனர்.நிறைவாக சாரண மானவர்களுக்கு இயக்கத்தின் சார்பாக இனிப்பு வழங்கப்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!