18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்மலை அரசு பள்ளியில் ஓவிய போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசு.

மண்மலை அரசு பள்ளியில் ஓவிய போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசு.

எழுதியவர்: mohan February 22, 2021, 9:27 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலமாக சுவரில் ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ,பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி ஆசிரியர் பாரதி அனைவரையும் வரவேற்று பேசினார். ஓவியப் போட்டியில் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். உடன் பள்ளி ஆசிரியர்கள் இளவரசி,கலைவாணி, பாரதிதாசன், ஜெயகொடி, வள்ளி,முருகன் மற்றும் சிறப்பாசிரியர்கள் கந்தன்,ரமேஷ்,நித்தியா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!