திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவாநாயக்கன்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலமாக சுவரில் ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கீர்த்தி,பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி ஆசிரியர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். ஓவியப் போட்டியில் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரமணி, ஆசிரியர் பயிற்றுனர் ஆனந்தராஜ் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். உடன் பள்ளி ஆசிரியர்கள் , மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளியில் ஓவிய போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி அலுவலர் பரிசு.
எழுதியவர்: mohan February 21, 2021, 2:30 pm




You must be logged in to post a comment.