18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலையில் கொட்டிய ஜல்லி கற்கள் அகற்றிய போக்குவரத்து காவல்துறையினர்

சாலையில் கொட்டிய ஜல்லி கற்கள் அகற்றிய போக்குவரத்து காவல்துறையினர்

எழுதியவர்: mohan February 19, 2021, 11:38 am

மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே நேற்று இரவு லாரியில் சென்றுகொண்டிருந்த ஜல்லி கற்கள் சாலை நெடுகிலும் கொட்டி சென்றுள்ளார்கள் இதில் அதிக அளவாக டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்க பாதை அருகே 10 அடி நிலத்திற்கு ஜல்லி கற்கள் சிதறிக் கிடந்து உள்ளது இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் கீழே விழுந்து சிறு காயங்களுடன் தானாக எழுந்து சென்றார்கள் இது குறித்து தகவல் அறிந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினரும் மற்றும் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால் தாய் உதவி ஆய்வாளர் சேகர் காவலர் திருப்பதி ஆகியோர் இணைந்து சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லி கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் இரவு நேரத்தில் சென்ற ஜல்லிக் கற்களை ஏற்றி சென்ற லாரி சரியாக மூடாமல் இருந்ததால் சாலை முழுவதும் ஜல்லிக் கற்களை சிதற விட்டு சென்று இருக்கலாம் என தெரிய வருகிறது துரிதமாக செயல்பட்டு ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!