18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரயில் தண்டவாளம் அருகே உள்ள குப்பை மேட்டில் திடீர் தீ விபத்து .

ரயில் தண்டவாளம் அருகே உள்ள குப்பை மேட்டில் திடீர் தீ விபத்து .

எழுதியவர்: mohan February 19, 2021, 9:22 am

மதுரை மேல அனுப்பானடி அருகே உள்ள மதுரை ராமேஸ்வரம் ரயில் தண்டவாளம் உள்ளது இங்கே அதிக அளவு குப்பைகளை கொட்டி உள்ளார்கள் அகற்றாமல் இருந்ததால் அதில் திடீரென தீ பற்றி எரிந்தது கொழுந்துவிட்டு எரிந்த தீ மளமளவென வேகமாக பரவியது பெரும் புகை மூட்டம் ஆகவும் இருந்தது இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநகராட்சி குடிநீர் வாகனம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர் ரயில்வே தண்டவாளம் அருகில் குப்பை கொட்டியதால் மேலும் அது அகற்றாமல் விட்டதாலும் இந்த தீயானது பற்றியதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!