17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை…

சுரண்டை கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை…

எழுதியவர்: mohan February 18, 2021, 3:55 pm

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசமிருந்து ஜெபித்து வந்ததை நினைவு கூறும் வகையில் இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இத் தவக்காலம் சாம்பவற்புதன் புதன் அன்று துவங்குகிறது. சாம்பவற் புதனை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படும். அதே போன்று தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. புதுச்சுரண்டை சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் சேகர தலைவர் அருள்திரு டிகே ஸ்டீபன் தலைமையில் ஏராளமான சபை மக்கள் பங்கு பெற்று பிரார்த்தனை செய்தனர். பங்களாச் சுரண்டை தூய திருத்துவ ஆலயத்தில் நடந்த ஆராதனையில் சபை மன்ற தலைவர் வில்சன் சாலமோன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கீழச்சுரண்டை பவுலின் ஆலயத்தில் சபை குரு ஜானி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சுரண்டை சீயோன் ஆலயத்தில் சேகர தலைவர் அருள்திரு ஆல்வின் பிரைட் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!