18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக.,வில் ஐக்கியமான400 பெண்கள்மாவட்ட பொறுப்பாளர் கௌரவிப்பு.

திமுக.,வில் ஐக்கியமான400 பெண்கள்மாவட்ட பொறுப்பாளர் கௌரவிப்பு.

எழுதியவர்: mohan February 17, 2021, 5:50 pm

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக., சார்பில் வேதாளை அருகே இடையர்வலசை கிராமத்தில் மாற்றுக் கட்சியினர் திமுக., வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 350க்கும் பெண்கள் உள்பட பலர், மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் திமுக., வில் இணைந்தனர். மண்டபம் கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் ஜெ.தௌபிக் அலி, மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.சி.ஜீவானந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, பதிவாளர் (ஓய்வு) முனைவர் சு.பாலு, ராமேஸ்வரம் நகர் பொறுப்பாளர் கே.இ.நாசர்கான், மண்டபம் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், சந்திரசேகர், பேரின்பம் உள்பட பலர் பங்கேற்று சிறப்பித்தனர். மண்டபம் தாய் செட்டிநாடு உணவகத்தில் நடந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக.,வில் இணைந்தனர்.பேரூர் செயலாளர் டி.ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத்ராஜா, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் என்.பூவேந்திரன், மண்டபம் ஒன்றிய மீனவரணி துணை செயலாளர் எம்.நம்புராஜன், மாவட்ட பிரதிநிதி சாதிக்பாட்சா, நகர் துணை செயலாளர் பொற்கிழி பகுர்தீன், பொற்கிழி செல்லமரைக்காயர், ஒன்றிய பிரதிநிதி கா.ராஜ்குமார், தகவல் தொழில் நுட்ப அணி நகர் அமைப்பாளர் வெள்ளைச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!