17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் இன்று (17/02/2021) பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு கொடியேற்றம்..

கீழக்கரையில் இன்று (17/02/2021) பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு கொடியேற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் February 17, 2021, 2:26 pm

பிப்ரவரி 17-பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைநகர் சார்பாக இரண்டுஇடங்களில் நடைபெற்றது.

அதன் முதல் நிகழ்ச்சியாக ஜூம்மா பள்ளி அருகில் கொடிஏற்றும் நிகழ்ச்சி  நகர் தலைவர் அஹமது நதீர் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் கீழைஅஸ்ரப்,  மக்கள்செய்தி தொடர்பாளர் தொகுப்புரை ஆற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், எஸ்டிபிஐ கட்சயின் தொகுதி துணை தலைவர் நூருள் ஜமான், நகர் துணை தலைவர் ஜெய்னுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நீல நட்சத்திரம் பொறித்த மூவர்ணக் கொடியை பாப்புலர் ஃப்ரண்டின் டிவிஷன் தலைவர் ஹமீது சாலிஹ் ஏற்றிவைத்தார்..

இக்கொடியேற்ற விழாவில் டெல்லியில் உயிர் நீத்த விவாசயிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. SDPI_கட்சயின் நகர்தலைவர் ஹமீதுபைசல்  சிறப்புரை ஆற்றினார். SDPI_கட்சயின் மாநில பேச்சாளர் ஜஹாங்கீர் அருஷி வாழ்த்துரையாற்றினார். இறுதியாக நகர் செயற்குழு உறுப்பினர் முஹ்ஸீன் நன்றியுரை ஆற்றினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!