17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதிய சத்துணவு கட்டிடத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

புதிய சத்துணவு கட்டிடத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

எழுதியவர்: mohan February 17, 2021, 9:26 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங்கொண்டான் கிராமத்தில் அரசு பள்ளியில் சத்துணவு கூடம் இல்லாமல் வெளிப்புறத்தில் வைத்து சமையல் செய்து வந்திருந்தனர். இதையடுத்து அந்த பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் – யிடம் கோரிக்கை வைத்ததில் ஏழு லட்சம் மதிப்பில் சத்துணவு கட்டிடம் பள்ளி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் திறந்து வைத்து மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். அது சமயம் அதே பகுதியை சேர்ந்த 50 மேற்பட்ட பெண்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் எங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆணவுடன் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றவும் ,ஒரு மாதம் காத்திருங்கள் என வாக்குறுதி அளித்தார். இருப்பினும் தற்போது எங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது உங்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என சட்டமன்ற உறுப்பினர் வாக்குறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!