18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெசவாளர்கள் சம்பளம் வழங்க வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் .

நெசவாளர்கள் சம்பளம் வழங்க வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் .

எழுதியவர்: mohan February 17, 2021, 9:20 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் துரைச்சாமிபுரம், தெற்கு வைத்தியநாதபுரம் ,சிவகாமிபுரம், பகுதிகளில் 3 பெடல் தறி சொசைட்டி செயல்பட்டு வருகிறதுஇந்த மூன்று சொசைட்டிகளிலும் சுமார் 1500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் சேலை வேஷ்டி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான சீருடைகள் பேன்ற துணிகளை நெசவு செய்து தங்களுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் தற்போது சொசைடியில் உள்ள நெசவாளர்கள் மேலாண்மை அதிகாரி (MD) ஊதியமாக ஒவ்வொரு சொசைட்டியில் இருந்து 30 ஆயிரம் வழங்க வேண்டும் என அரசாணை வெளியாகியுள்ளதாக கூறி மேலாண்மை அதிகாரியும் நியமனம் செய்துள்ளனர் கடந்த 20 ஆண்டு காலமாக இது போன்று எந்த ஒரு செயல்பாடும் இல்லாத நிலையில் புதிதாக இதுபோன்று அரசாணை வெளியிடுவது நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும்நேற்று பதவி ஏற்க வந்த மேலாண்மை அதிகாரியை பதவி ஏற்க விடாமல் மூன்று சொசைடி நெசவாளர்களும் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவிந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்மேலும் தமிழக முதல்வர் உடனடியாக இதை கவனத்தில் கொண்டு நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!