17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உச்சிமலைக்குப்பம் பள்ளியில் சுவர் ஓவியப்போட்டி – மாணவர்களுக்கு பாராட்டு.

உச்சிமலைக்குப்பம் பள்ளியில் சுவர் ஓவியப்போட்டி – மாணவர்களுக்கு பாராட்டு.

எழுதியவர்: mohan February 16, 2021, 5:41 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த உச்சிமலைக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலமாக சுவரில் ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் கே.பழனியம்மாள் தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேலாயுதம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி ஆசிரியர் அனிதா ரூபாவதி ரேச்சல் அனைவரையும் வரவேற்று பேசினார். ஓவியப் போட்டியில் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா ரவி பரிசு வழங்கி பாராட்டினார். உடன் பள்ளி ஆசிரியர்கள் காசி, சுரேஷ், சரவணன், ஷாலினி, நந்தகுமார் , அருண் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!