18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் பாதை சார்பாக தமிழர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா

மக்கள் பாதை சார்பாக தமிழர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா

எழுதியவர்: mohan February 15, 2021, 2:06 pm

மக்கள் பாதை சார்பாக தமிழர் திருநாளை முன்னிட்டு திண்ணைப்பள்ளி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் பரிசளிப்பு விழா இன்று இராமநாதபுரம் வி.ஜே.பி மஹாலில் நடைபெற்றது.இப்போட்டியில் தமிழகமெங்கும் பல மாணவர்கள் பங்கேற்றனர்.மக்கள் பாதை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் வரவேற்றார்.மாவட்ட திண்ணைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சரவணன் தொகுத்து வழங்கினார்.மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கிளாட்வின் தலைமை உரையாற்றினார்.நல்லாசிரியர் விருது பெற்ற பெனடிக்ட் அதிரியான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் மிகச்சிறிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சாதனை புரிந்த கின்னஸ் சாதனையாளர் மாணவன் செய்யது அகமது சமீர் அவர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் தினேஷ், ஒன்றிய பொறுப்பாளர்கள் இப்ராஹிம், சுரேஷ் கண்ணன் மற்றும் அஷ்ரப், அனோஜ் கெல்வின் , இராஜசேகர் பங்கேற்று சிறப்பித்தனர்.இறுதியாக கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசும் சான்றிதழும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.அதிக மாணவர்களை பங்கேற்க செய்த பள்ளிக்கும் மற்றும் கட்டுரைப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் நன்றியுரை கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!