18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பூ சந்தையில் முகூர்த்த நாளையொட்டி மல்லிகை 3000ரூபாய்க்கு விற்பனை.

உசிலம்பட்டி பூ சந்தையில் முகூர்த்த நாளையொட்டி மல்லிகை 3000ரூபாய்க்கு விற்பனை.

எழுதியவர்: mohan February 14, 2021, 12:29 pm

இன்று காதலர் தினம் என்பதாலும், நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. ஆனால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூ சந்தையில் காதலர் என்பதாலும், நாளை மாசி மாத முதல் முகூர்த்தம் என்பதால் பூக்களின் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று 1கிலோ மல்லிலை1000ரூபாய்க்கு விற்பனை நடைபெற்ற நிலையில் இருமடங்கு அதிகரித்து 3000ரூபாய்க்கு விற்பனை நடைபெறுகிறது. அதே போல் கனகபாம்பிரை 800க்கு விற்பனையான நிலையில் 1800ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் உசிலம்பட்டி பகுதியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் மல்லிகை வரத்து குறைந்துள்ளது. இதனால் பூ வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சிறிய அளவிலான மல்லிகைப்பூவே சந்தைக்கு வந்துள்ளது. இதனால் மல்லகைப்பூ கிடைக்காமல் வேறு வழியின்றி பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். அதே போல் ரோஜாப்பூக்கள் 1கிலோ 500ருபாய்க்கும்,செவ்வந்தி 200க்கும்,கோலிகொண்டை 400க்கும்,பிச்சிப்பூ 1500க்கும், முல்லை 2000க்கும் விற்பனையாகிறது.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!