திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மேல் பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து 72வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் முகமது, தமுமுக நகர தலைவர் தெளலத்கான், தமுமுக ஒன்றிய தலைவர் ஷபியுல்லா ஆகியோர் தலைமை தாங்கினார்மாவட்ட பொதுக்குழு தலைவர் கலீமுல்லாஹ்ர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முகமத் ரியாஸ், நவீத் கான் ,நாசர் உசேன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பாக நடைபெற்ற ரத்ததான முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் முன்னாள் தமுமுக நகர தலைவர் முகமது ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர் சிறப்பு அழைப்பாளராக திமுக நகர செயலாளர் சாதிக் பாஷா, செங்கம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சென்னம்மாள் முருகன், வியாபாரி சங்கத் தலைவர் அப்துல் சத்தார், மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப், நகர செயலாளர் முபாரக், மற்றும் அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்தக் கொடையாளர்கள் ரத்தம் வழங்கினார். மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் நிகழ்வில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் ரத்தம் வழங்கிய கொடை யாளர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனித நேய மக்கள் கட்சி சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் இம்ரான் தமுமுக நிர்வாகிகள் கலில், காதர்பாட்சா, உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் .
எழுதியவர்: mohan February 14, 2021, 11:58 am




You must be logged in to post a comment.