18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் விரகனூர் லாரி எடை மேடையில் நூதன முறையில் சிப் பொருத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல்

திருப்பரங்குன்றம் விரகனூர் லாரி எடை மேடையில் நூதன முறையில் சிப் பொருத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல்

எழுதியவர்: mohan February 14, 2021, 10:36 am

மதுரை மேலஅனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் யோகி இவர் விரகனூர் ரிங் ரோட்டில் அமைந்துள்ள லாரி எடை மேடையை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி தனது லாரி எடை மேடையின் உள்புறத்தில் பச்சை நிறத்தில் வெளிச்சம் வருவதைக் கண்ட யோகி உள்ளே சென்று பார்த்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் எடை இயந்திரத்தில் சிப் ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.தொடர்ந்து இதனை பொருத்தியது யார் என்பது கண்டுபிடிப்பதற்காக சிசிடிவியை ஆய்வு செய்தபோது கடந்த 5-ஆம் தேதி நள்ளிரவில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் லாரி எடை மேடை கீழ்ப்புறத்தில் சென்று சிப்பை பொருத்தியது தெரியவந்தது.

பின்னர் லாரி மேடையில் பொருத்தப்பட்டுள்ள சிப் சரியாக உள்ளதா என பார்ப்பதற்காக அந்த மோசடி கும்பலை சேர்ந்த 3 பேர் வந்தபோது. அவர்களை கண்ட யோகியும் அவருடைய நண்பர்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து அங்கேயே கட்டிப் போட்டனர்.பின்னர் அவர்களை சிலைமான் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.முதற்கட்ட விசாரணையில் எடைமேடையில் காவலாளியாக பணியாற்றியவர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.எடைமேடையில் மோசடி செய்ததாகரபீக் (வயது 36)அபுபக்கர் (வயது 30) மைதின் பாட்சா (வயது 37)சம்சுதீன் (வயது 38) கமால் பாட்ஷா (வயது 52)சுப்பையா (வயது 72) ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.லாரியில் ஏற்றி வரும் பொருட்களின் எடையை குறைத்து அதிக லாபம் ஈட்ட நினைத்த மோசடி கும்பல் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!