விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் பட்டாசு வெடித்து 19பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் பலர் கவலைகிடமாக உள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்
தமிழகம் முழுவதிலும் உள்ள பட்டாசு ஆலைகளில் உள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரை அடுத்துள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் விபிஎம்.சின்னச்சாமி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆய்வு செய்தார். பட்டாசு ஆலையில் உள்ள அனைத்து கட்டடிடங்கள், பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளதா என ஆய்வு செய்தார். மேலும் அங்கு பணிபுரியும் பட்டாசு தொழிலாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பட்டாசு தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார். இந்த ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆய்வு
எழுதியவர்: mohan February 13, 2021, 5:48 pm




You must be logged in to post a comment.