செங்கம் பகுதியில் 1985 ஆம் ஆண்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் 35 ஆண்டுகளுக்கு பிறகு
சந்திப்பு நிகழ்ச்சியை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 1985 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் முதல்முறையாக 35 ஆண்டுகளுக்கு பிறகு அனைவரும் ஒன்றிணைந்து சந்திக்க முடிவு செய்யப்பட்டு தொலைபேசி மூலமாக சுமார் ஏழு மாதமாக ஒவ்வொருவருடைய தொலைபேசி எண்கள் மற்றும் முகவரியை கண்டுபிடித்து நட்புக்கள் சங்கமம் கொண்டாடும் விதமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்க்கையினை பகிர்ந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களின் ஆசிரியர்களை சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தி ஆசி பெற்றனர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ள முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளில் பலவிதமான சாதனைகள் படைத்து தங்கள் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது இதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்ட நிகழ்வு அவர்களின் குழந்தைகளுக்கு மற்றும் உறவினர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து முன்னாள் மாணவர்கள் அனைவரும் நினைவு பரிசினை பகிர்ந்து கொண்டனர் பின்பு விழா முடிவில் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாமல் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீரோடு கலைந்து சென்ற நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்படுத்தி இருந்தது சுமார் 7 மாத காலமாக 35 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்த மாணவர்களை ஒன்று சேர்த்து கடந்த கால நினைவுகளுக்கு அச்சாரமாக திகழ்ந்த அரிகிருஷ்ணன் பெருமாள்சாமி சேகர் இளவரசி எழில்மாறன் ஜோதி மூர்த்தி விஜய குமார் சிவகுமார் உள்ளிட்ட முன்னாள் மாணவர்களுக்கு அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்
புதுப்பாளையம் 1985 நட்புகள் சங்கமம்
எழுதியவர்: mohan February 13, 2021, 2:46 pm




You must be logged in to post a comment.