17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

எழுதியவர்: mohan February 13, 2021, 10:54 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த கோபிநாத் – பாண்டி செல்வி தம்பதியினர் இவர்களுக்கு 2 பிள்ளைகள் ஒரு ஆண் மற்றும் பெண்குழந்தை வயது(10) இரு குழந்தைகளுடனும் தாயருடன் மீனாட்சி நகரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் கணவன் மனைவி மற்றும் அவரது பாட்டி ஆகியோர் வழக்கம் போல் அவரவர்கள் வேலைக்கு சென்று விட, கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் சிறுமியின் தம்பி ஆகியோர் வீட்டில் தனியாக விளையாடி வந்துள்ளனர்.மாலை பணி முடிந்து வீடு திரும்பிய சிறுமியின் பாட்டி, வீட்டில் சிறுமி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் வீடு மற்றும் வெளிப்புறம் பகுதியிலும் தேடிய நிலையில் சிறுமி காணாமல் போனதை அறிந்து குடுபத்தினர் அனைவருக்கும் சிறுமியின் பாட்டி தகவல் தெரிவித்தார்.பின்னர் வேலை முடிந்து வந்த சிறுமியின் தந்தை கோபிநாத் _தாய்பாண்டி செல்வி இருவரும் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர்.சிறுமியை எங்கு தேடியும் கிடைக்காததால் சிறுமி ணாமல் போனது குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில், விசாரணையை மேற்கொண்ட அவளியாபுரம் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், காரியாபட்டி அருகே உள்ள ஒரு கண்மாய் கரையோரம் சிறுமி மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், தன் உறவினரான சின்னத்துரை தவமணி தம்பதியின் மகன் மணிகண்டன் (31) லோடு வண்டி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெளியே செல்லலாம் என்று தன்னை அழைத்து சென்றதாகவும், வெகு தூரம் சென்று ஒரு கண்மாய்கரையில் தன்னை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்த நிலையில், அவனியாபுரம் போலீசார் மணிகண்டனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!