18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய மதுரை செய்தியாளர் சிந்தலை பெருமாள் ஆத்மா சாந்தியடைய தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் & ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி

உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய மதுரை செய்தியாளர் சிந்தலை பெருமாள் ஆத்மா சாந்தியடைய தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் & ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி

எழுதியவர்: mohan February 12, 2021, 10:57 am

புதிய தலைமுறை, நியூஸ்7 உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சிகளில் செய்தியாளராக பணியாற்றிய மதுரையை சேர்ந்த சிந்தலை பெருமாள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று இயற்கை எய்தினார்.அன்னாரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பாக மதுரையில் இரங்கல் கூட்டம் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த இரங்கல் கூட்டத்தில் சங்க செயலாளர் காசிலிங்கம் பொருளாளர் பாலமுருகன் துணை பொதுச் செயலாளர் தமிழ்செல்வம் உட்பட செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டு மறைந்த செய்தியாளர் திருவுருவ படத்திற்கு மவுன அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏந்தினர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!