17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு ஊசி

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு ஊசி

எழுதியவர்: mohan February 11, 2021, 6:26 pm

தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கொரோனா தடுப்பு ஊசி மையத்தில் முன்கள பணியாளர்களான மருத்துவத்துறை, காவல்துறை, மஸ்தூர் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 50 பேர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பு ஊசிகளை போட்டனர். தொடர்ந்து கொரோனா தடுப்பு ஊசி தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் சுரண்டை மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளர்கள் பாலு, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரகுமார், மற்றும் செவிலியர்கள் மருந்தாளுநர்கள், ஆய்வக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!