17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீலிநாயக்கன்பட்டியில் அம்மா கிளினிக் துவக்கவிழா

வீலிநாயக்கன்பட்டியில் அம்மா கிளினிக் துவக்கவிழா

எழுதியவர்: mohan February 11, 2021, 11:40 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள வீலிநாயக்கன்பட்டியில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான அம்மா மினி கிளினிக் மருத்துவமனை துவக்கவிழா நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழி சேகர் தலைமை தாங்கி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் தண்டபாணி. நிலக்கோட்டை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சேகர், வீலி நாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் விருசின்னு முருகன், சித்தர்கள் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முத்தையா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் மகாலட்சுமி ஸ்ரீதர், சக்திவேல், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் விஜய பாலமுருகன்,. அ.தி.மு.க ஒன்றிய நிர்வாகிகள் தவமணி, முனியப்பன், செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஊராட்சி மன்ற செயலாளர்கள் விஜயகர்ணபாண்டியன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர் இதேபோன்று சித்தர்கள்நத்தம் ஊராட்சி , குண்டலப்பட்டியில் அம்மா மினி கிளினிக் மருத்துவமனை துவங்கப்பட்டது. நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!