18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையத்தில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ராஜபாளையத்தில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

எழுதியவர்: mohan February 11, 2021, 10:45 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார்  வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சேர்ந்த குருவைய்யா என்பவரது மகன் பரமகுரு (17). இவர் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.பரமகுரு தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டும், படங்களை பார்த்துக் கொண்டுவந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மனமுடைந்த பரமகுரு காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!