18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தீ விபத்தினால் வீதிக்கு வந்த குடும்பத்திற்கு உடனடியாக உதவி கரம் நீட்டிய மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை..

தீ விபத்தினால் வீதிக்கு வந்த குடும்பத்திற்கு உடனடியாக உதவி கரம் நீட்டிய மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை..

எழுதியவர்: ஆசிரியர் February 11, 2021, 1:03 am

விழுப்புரம் அருகே தும்பூர் பகுதியில் ஆற்றங்கரையோரம் வசித்துவந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட இருளர் இனமக்களின் குடிசைவீடுகள் மின்கசிவு காரணமாக பற்றி எரிந்து சாம்பலானது.

இதையடுத்து அங்கிருந்த மக்கள் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எந்தவித அடிப்படை உரிமைகளும் கிடைக்காமல் இருந்த இருளர் இனமக்கள் உணவுக்கும், உடைக்கும் தவிப்பது அறிந்து, மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார், சம்பந்தபட்ட அனைத்து குடும்பத்திற்கும் தலா ஒருமூட்டை அரிசி வழங்கி உதவி செய்ய ஏற்பாடுகள் செய்தார்.

திடீரென பற்றிய தீயால் வீட்டிலிருந்த பொருட்களை மீட்க முடியாமல் வீதிக்குவந்த மக்களின் துயர் துடைத்த அன்பு அறக்கட்டளைக்கு பாராட்டுகளை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!