17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீமானூத்து பெருமாள் கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதையொட்டி ஆலோசனைக் கூட்டம்.

சீமானூத்து பெருமாள் கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதையொட்டி ஆலோசனைக் கூட்டம்.

எழுதியவர்: mohan February 10, 2021, 3:55 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீமானூத்து பஞ்சாயத்துக்குட்பட்ட பெருமாள் கோவில்பட்டியில் கடந்த 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுசம்பந்தமாக பேரையூர் ரோட்டில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் அதற்கான விதிமுறைகள் குறித்து ஜல்லிக்கட்டு விழா கமிட்டி குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி மற்றும் ஜல்லிக்கட்டு குழுவினர், தாசில்தார் விஜயலட்சுமி, டிஎஸ்பி ராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கால்நடைத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள்,காவல் துறையினர், தீயணைப்பு துறை அதிகாரிகள், உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!