17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நகராட்சி » பிரச்சனை » இரவு நேரங்களில் உலா வரும் பெருச்சாளிகளால் கீழக்கரையில் நோய் பரவும் அபாயம் …

இரவு நேரங்களில் உலா வரும் பெருச்சாளிகளால் கீழக்கரையில் நோய் பரவும் அபாயம் …

எழுதியவர்: ஆசிரியர் November 16, 2017, 1:25 am

இரவு நேரங்களில் உலா வரும் பெருச்சாளிகளால் கீழக்கரையில் இரவு நேரங்களில் தெருக்களில் பெருச்சாளிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தெருக்களில் உலா வரும் பெருச்சாளிகள் சில நேரங்களில் ஆங்காங்கே செத்து மடிந்து கிடக்கின்றன. இதனால் அபாயகரமான நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது.

இது போன்று உலவும் எலிகளால் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் ப்ளேக் நோய் போன்ற கொடிய நோய்களும் தாக்கக்கூடிய அபாயம் உள்ளது. இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்களும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திடம் இந்த பெருச்சாளிகளை ஒழிக்க மனுக்கள் கொடுத்துள்ளனர்.

மேலும் கீழக்கரையில் மணல் பகுதி அதிகமாக இருப்பதால் வீடுகளின் கீழ் பகுதி ஓட்டை ஏற்படுத்தி பெருக்கத்தை உண்டாக்கின்றன. மழைகாலங்களில் வீடுகள் சரிந்து விழுந்து விடும் இடங்களிலும் அதிகமாக பெருச்சாளிகள் காணப்படுகின்றன. இவற்றை முழுமையாக அழிக்க கீழக்கரை நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!