தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட
ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடந்தது.மாவட்ட தலைவர் பி.கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் என்.ஹரிஹர சுதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.பிர்தௌஸ் கனி, பி.கோபால், எஸ்.கணேசன் முன்னிலை வகித்தனர்.தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்குவது போல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம், கடுமையாக பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் மாத உதவித்தொகை வழங்க வேண்டும், தனியார் துறைகளில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
எழுதியவர்: mohan February 9, 2021, 2:00 pm




You must be logged in to post a comment.