17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கல்வி » கீழக்கரை செய்திகள் » மரம் வளர்த்தல் – ஒரு அழகிய கலையாக மாற்றிய அல் பையினா மெட்ரிக் பள்ளி மாணவச் செல்வங்கள்…

மரம் வளர்த்தல் – ஒரு அழகிய கலையாக மாற்றிய அல் பையினா மெட்ரிக் பள்ளி மாணவச் செல்வங்கள்…

எழுதியவர்: ஆசிரியர் November 15, 2017, 6:46 pm

கீழக்கரை அல் பையினா பள்ளியில் மாணவர்களிடையே இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதம் அல் பையினா பசுமை படை ( Green Army) என்ற ஒரு குழுவை உருவாக்கி மாணவ, மாணவிகள் மத்தியில் மரம் வளர்த்தல் பற்றிய ஆர்வத்தை வளர்த்து வருகிறார்கள்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக “செடி நடும் நாள்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு செய் முறைகள் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பல மாணவ, மாணவிகள் தாங்கள் விதைத்து வளர்ந்த மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் பார்வைக்கு வைத்தனர்.

அவ்வாறு பார்வைக்கு வைக்கப்பட்ட பூந்தொட்டிகளை கலை நயத்துடன் பல வகையான மர வடிவில் வடிவமைத்திருந்நது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதில் பங்குபெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்தியதுடன் இது போன்று இன்னும் வீரியமாக செயல்பட ஊக்கமளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!