18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேத்தூர் பகுதியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து சாலை மறியல் போராட்டம்.

சேத்தூர் பகுதியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து சாலை மறியல் போராட்டம்.

எழுதியவர்: mohan February 7, 2021, 11:45 am

இராஜபாளையம் அருகே சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசின் வேளாண்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும், தொகுதியின் முன்னாள் எம்.பி லிங்கம் தலைமையில் விவசாய சங்கங்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை முன்வைத்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலாண போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!