17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தெருமுனை கூட்டம்

செங்கம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தெருமுனை கூட்டம்

எழுதியவர்: mohan February 7, 2021, 11:08 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நபிகளார் வாழ்வை உலகறிய செய்வோம் முஹம்மதுர் ரஸீலுல்லாஹ் வின் இரண்டு மாத கால தொடர் பிரச்சாரத்தை செங்கம் கிளை சார்பில் மாபெரும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் காதர் ஷரிப் தலைமை தாங்கினார்.செங்கம் கிளை தலைவர் ஃபையாஸ், கிளை செயலாளர் முபாரக் பாஷா, துணைத் தலைவர் மாலிக் பாஷா, துணை செயலாளர் ஜலீல், மருத்துவ அணி ஷாகித், வர்த்தகர் அணி நூருல் அமீன், மாணவரணி சல்மான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் அஷ்ரப்தீன்ஃபிர்தவ்ஸி மற்றும் இஸ்மாயில் சிறப்புரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் ஆண்களும், பெண்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.செங்கம் கிளை தெருமுனை கூட்டத்தில், புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், இந்திய சுதந்திரத்திற்கு போராடிய முஸ்லிம்களின் தியாகங்கள் பாட புத்தகத்தில் இடம்பெற வலியுறுத்தியும், பாஜகவை சேர்ந்த கல்யாண ராமனை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தேசிய நெடுஞ்சாலை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செங்கம் கிளை பொருளாளர் முகமது இலியாஸ் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!