17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது

எழுதியவர்: mohan February 6, 2021, 1:46 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போது நுழைவு வாயிற் கதவுகள் அடைக்கப்பட்ட தால் ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் லேசான தள்ளு முள்ளு நடைபெற்றது . பின்னர் நுழைவு வாயில் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஈடுபட்டனர். .இப்போராட்டத்தில் ஒரு பெண் ஊழியர் மயங்கி விழுந்தார் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களும் கைது செய்யப்பட்டு போலீசார் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!