உசிலம்பட்டி அருகே டாட்டா ஏசி மீது லாரி மோதி விபத்தில், லாரி நிலை தடுமாறி சாலையோரம் இருந்த சில வாகனங்கள் மீதும் மோதி அருகில் இருந்த கடைக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் மதுரையிலிருந்து காய்கறி ஏற்றி வந்த லாரி சாலையை கடக்க முயன்ற டாட்டா ஏசி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி சாலையோரம் இருந்த 3 இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி அருகே இருந்த கடைக்குள் புகுந்தது.இதில் லாரி ஓட்டுநர் குப்பணம்பட்டியைச் சேர்ந்த சிவசாமி என்பவர் படுகாயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.சம்பவமறிந்து விரைந்து வந்த பொதுமக்கள் மற்றும் செக்காணூரணி போலிசார் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய லாரி ஓட்டுநரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த போலிசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே டாட்டா ஏசி மீது லாரி மோதி விபத்து.
எழுதியவர்: mohan February 6, 2021, 12:52 pm




You must be logged in to post a comment.