18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் வாக்குச்சாவடி குறித்த ஆலோசனை கூட்டம்

நிலக்கோட்டையில் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் வாக்குச்சாவடி குறித்த ஆலோசனை கூட்டம்

எழுதியவர்: mohan February 6, 2021, 11:33 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் யூஜின் தலைமையில் வாக்குச்சாவடிகள் குறித்து அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் : நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள இளைஞர் மற்றும் கல்லூரி மாணவிகள் உட்பட அனைவரையும் சேர்க்க உரிய முகாமிட்டு அதிக அளவு வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.தாசில்தார் யூஜின்: பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தின் படி முறையாக முகாம் அமைத்து 18 வயது நிரம்பிய அனைத்து நபர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.தி.மு.க.வடக்கு ஒன்றியசெயலாளர் மணிகண்டன் கூறியதாவது: நிலக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை பல்வேறு வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் இருப்பிடத்திற்கு உரிய வாக்குச்சாவடிகளில் இல்லாமல் பல்வேறு குளறுபடி உள்ளது அதை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.தாசில்தார் யூஜின்: தற்போது அது சம்பந்தமான நடவடிக்கைகள் தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது உரிய முறையில் அந்தந்த வாக்காளர்கள் உள்ள முகவரிக்கு பக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளர் யாகப்பன்,நல்லதம்பி, மோகன் ,பாண்டியன்,தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன் , சௌந்தரபாண்டியன், அதிமுக நகரச் செயலாளர்கள் தண்டபாணி, ராஜசேகர், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!