18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை SDPI கட்சி சார்பாக “பசியிலிருந்து விடுதலை… பயத்திலிருந்து விடுதலை”.. “குடும்பமாய் இணைவோம்”… நிகழ்ச்சி..

கீழக்கரை SDPI கட்சி சார்பாக “பசியிலிருந்து விடுதலை… பயத்திலிருந்து விடுதலை”.. “குடும்பமாய் இணைவோம்”… நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் February 5, 2021, 9:23 pm

கீழக்கரையில்  எஸ்டிபிஐ கட்சியின் 10வது வார்டு சேரான் தெரு சார்பாக “குடும்பமாய் இணைவோம்”  நிகழ்ச்சி கிளைத்தலைவர் ஜமீல் கான் தலைமையில் நடைபெற்றது. இதில்  11வது வார்டு கிளை தலைவர்  சுல்தான் சிக்கந்தர் வரவேற்புரையாற்றினார். முன்னிலை நகர் துணைத்தலைவர் ஜெயினுதீன் மற்றும் ஹாஜா அலாவுதீன்,  அப்துல் காதர் உமன்ஸ் இந்தியா மூவமெண்ட் மாவட்ட செயலாளர் ஜாபிரா நதீர் கலந்து கொண்டனர்.

தொகுதி துணை தலைவர் நூருல் ஜமான் தொகுத்து வழங்கினார். நகர் தலைவர் ஹமீது பைசல் மற்றும் மாநில பேச்சாளர் மௌலான ஜஹாங்கீர் அரூஸிகருத்துரை வழங்கினார். மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது சிறப்புரையாற்றினார். 10 வது கிளை செயலாளர் யூசுப் சாகிப் நன்றியுரையாற்றினார்.

தொழிற்சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் கீழை அஸ்ரப், வர்த்தக அணி நகர தலைவர் செய்யதுயாசின், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர் தலைவர் அஹமது நதீர், கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா நகர் தலைவர் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதில் கீழக்கரை முன்னால் தமுமுக நகர் தலைவர் முகைதீன் அடுமை காக்கா, கண்மணி ஜமீல்,  மீன் கடை மரிக்கா,  ஜப்பார், காளி முஹம்மது ,ஹனிபா, யூசுப் உட்பட திரளாக மக்கள் கட்சியில் இணைந்தார்கள்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!