17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பட்டப்பகலில் பொறியாளர் வீட்டில் 150 பவுன் 6 லட்சம் கொள்ளை.

மதுரையில் பட்டப்பகலில் பொறியாளர் வீட்டில் 150 பவுன் 6 லட்சம் கொள்ளை.

எழுதியவர்: mohan February 5, 2021, 10:07 am

மதுரை பைக்காரா வை சேர்ந்த பொறியாளர் முருகன் 47 நேற்று மதியம் 150 பவுன் 6 லட்சம் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டது போலீசார் தீவிர விசாரணை. பைக்காரா இபி காலனியை சேர்ந்த முருகன் இவர் வாடிப்பட்டி அருகே உள்ள தனியார் டிரக்டர் கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி காளீஸ்வரி ஒரு மகள்இரு மகன்கள் உள்ளனர் பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் பள்ளிக்கு சென்ற நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கடைசி மகனுடன் காளீஸ்வரி பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு சுமார் நேற்று மதியம் ஒரு மணி அளவில் சென்று பின் துணிக்கடைக்கு சென்றுவிட்டு மூவரும் மதியம் 4 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர் வீட்டை திறந்து உள்ளே சென்றபோது பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோன காளீஸ்வரி பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது இதன் வழியாக நுழைந்த மர்ம நபர்கள் 150 பவுன் நகை மற்றும் ஆறு லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்று உள்ளார்கள் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் பட்டப்பகலில் கொள்ளை அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!