17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மழையால் விளைநிலங்களிலேயே அழுகி,வெங்காயம் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை.

மழையால் விளைநிலங்களிலேயே அழுகி,வெங்காயம் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை.

எழுதியவர்: mohan February 4, 2021, 11:22 am

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, அலங்காநல்லூர்,பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் சின்னவெங்காயம் சுமார் 100 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ளது.இதில் பருவம் தவறி பெய்த மழையால் வெங்காய செடிகளில் வேர்அழுகல்நோய் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் காய்பிடிக்கும் பருவத்தில் நோய் தாக்கியுள்ளதால் சின்ன வெங்காய செடிகள் விளைநிலங்களலேயே வெங்காயம் அழுகி, மண்ணோடு மடிந்து வருகிறது. இந்தநிலையில் உழவு, நடவு, உரம், மருந்து என ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள், உரிய விளைச்சலை எடுக்கமுடியாமல் வேதனையில் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து மேட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி பிரதாப் கூறியதாவது:-ஆடி மாதம் முதல் பல்வேறு வகையான மானாவாரி பயிர்களை விவசாயிகள்பயிர் செய்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 15 நாட்களாக பருவம் தவறி பெய்த தொடர் கனமழையால் வெங்காயச் செடிகள் வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு அழுகிவிட்டது. இதில் நடவு முதல் அறுவடை செய்யும் வரை ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இந்த நிலையில் தற்பொழுது சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இந்த நேரத்தில் மழை காரணமாக வெங்காய செடிகள் அழுகி வீணாகி விட்டது. அதனால் ஒரு ஏக்கர் பயிர் செய்துள்ள விவசாயிக்கு தலா ஒரு லட்சம் வரை இழப்பீடு ஏற்படும் அவலம் உள்ளது. எனவே வேளாண் துறையினர் தங்களது விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட வெங்காய பயிர்களுக்கான உரிய இழப்பீட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!