17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தில் சென்ற ட்ரம் செட் குழுவினருக்கு நூதன தண்டனை வழங்கிய போலீசார்.

சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தில் சென்ற ட்ரம் செட் குழுவினருக்கு நூதன தண்டனை வழங்கிய போலீசார்.

எழுதியவர்: mohan February 3, 2021, 2:59 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை முன்பு சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணிந்து கொண்டு வாகன ஒட்டியவர்களுக்கும், கார்களில் சீட்பெல்ட் அணிந்தவர்களுக்கும் இனிப்புக்கள் வழங்கினார். மேலும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்பவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு நோட்டீஸ் வழ்ஙகியும், முககவசங்களும் வழங்கப்பட்டது. அப்போது அந்த வழியாக விஷேச நிகழ்ச்சிக்காக ட்ரம் செட் குழுவினர் வாகனத்தில் சென்ற போது அங்கிருந்த போலீசார் விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என கூறி அவர்களுக்கு நுதன தண்டனை வழங்கினார். சுமார் 10நிமிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக ட்ரம் செட்டை அடித்து ஓசை எழுப்ப வேண்டுமென தண்டனை வழங்கினர். அதனைதொடர்ந்து ட்ரம் செட் குழுவினர் வேறு வழியில்லாமல் ட்ரம்செட்டை அடித்தனர். அதனைதொடர்ந்து போலீசார் ட்ரம்செட் குழுவினருக்கு சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!