திருவண்ணாமலையில், பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளையொட்டி மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்ட கழக செயலாளரும் எ.வ.வேலு, கழக தணிக்கை குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருவேங்கடம், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாவட்ட துணை செயலாளர் சாவல் பூண்டி சுந்தரேசன், மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார். இதேபோல் செங்கத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி ஒன்றிய அவைத்தலைவர் வீரபத்திரன் தலைமையில் போளூர் சாலையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக அமைதி ஊர்வலமாக சென்று அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊர்வலத்தில் நகர ஒன்றிய மாவட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் திமுக சார்பில் அண்ணா நினைவு நாள்.
எழுதியவர்: mohan February 3, 2021, 2:52 pm




You must be logged in to post a comment.