18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இறை தூதரை இழிவாக பேசிய கல்யாணராமனை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் சார்பாக கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்………

இறை தூதரை இழிவாக பேசிய கல்யாணராமனை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் சார்பாக கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்………

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2021, 12:48 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி முன்பாக கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் அனைத்து கிளைகள் சார்பாக சில நாட்களுக்கு முன்பாக நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பாஜகவை சேர்ந்த கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் கலந்து கொண்டு கல்யாணராமனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.மேலும் பாதுகாப்பு பணியில் கீழக்கரை டி.எஸ்.பி முருகேசன் தலைமையில் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திலகராணி, எஸ்.பி. எஸ்.ஐ செல்வராஜ், எஸ்.ஐ.சரவணன், பாண்டி ஆகியோர் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!