17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முனைவர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு வாழ்த்து.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முனைவர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு வாழ்த்து.

எழுதியவர்: mohan February 1, 2021, 11:24 am

இந்திய அரசு மதுரையை சேர்ந்த பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது அறிவித்துள்ளது.இதற்காக வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முனைவர் சாலமன் பாப்பையா அவர்களை சந்தித்தனர்.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது மகிழ்ச்சியை தெரிவித்து வாழ்த்து மடல் வழங்கினார்.அப்போது சாலமன் பாப்பையா வழிகாட்டி மணிகண்டனிடம் சமூக சேவைகள் குறித்து கேட்டறிந்து வாழ்த்தினார்.இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர் இல.அமுதன், அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில்குமார், புத்தக தான வங்கி அமைப்பாளர் அசோக்குமார் மற்றும் எம்மால் இயன்றது கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்து வாழ்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!