17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக துணை முதல்வர் இளைய மகன் கலந்துகொண்டு சாமி தரிசனம்.

ராஜபாளையம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக துணை முதல்வர் இளைய மகன் கலந்துகொண்டு சாமி தரிசனம்.

எழுதியவர்: mohan February 1, 2021, 11:19 am

விருதுநகர் , தென்காசி மாவட்ட எல்கை பகுதியில் அமைந்துள்ள மிகப் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற பெற்ற ஸ்ரீ வாழவந்தாள் அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று யாகசாலை பூஜைகள் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.இந்நிகழ்வில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் இளைய மகன் ஜெயபிரதீப் கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வான ராஜகோபுரத்தில் தீர்த்த அபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். உடன் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்பின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது,என் தந்தையின் அம்மாவின் சொந்த ஊர் இந்தப்பகுதி வாழவந்தாள்புரம். என்னை இங்கு கும்பாபிஷேக நிகழ்வுக்கு அழைத்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார் .சசிகலா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிகிறார் உங்கள் கருத்து என செய்தியாளர்கள் கேட்டதற்கு,உலகத்திலுள்ள அனைவரும் கொரோணாவில் இருந்து மீண்டு நலமாக இருக்க கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என பேட்டி.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!