17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு…

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு…

எழுதியவர்: mohan January 30, 2021, 1:29 pm

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் ஐபிஎஸ் தலைமையில் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டு தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். உறுதி மொழியின் போது, இந்திய அரசியலமைப்பின் பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று உளமார உறுதியளிக்கின்றேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கின்றேன். என்று உறுதி மொழி எடுத்து கொண்டனர்.இதேபோல் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!