18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெருங்குடியில் சொத்துப் பிரச்சினை காரணமாக பெண் கொலை .

பெருங்குடியில் சொத்துப் பிரச்சினை காரணமாக பெண் கொலை .

எழுதியவர்: mohan January 28, 2021, 12:39 pm

மதுரை பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனையில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உடன் பிறந்த சகோதர சகோதரிகளை போலீசார் விசாரிக்கின்றனர்.பெருங்குடி சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் முகமது கவுஸ். இவரது மனைவி காத்தூன் பிவி(55). இவர் தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசித்து வந்துள்ளார் .இது தொடர்பாக அவரது சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை உறவினர்கள் சேர்ந்து அரிவாள்மனை மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியதில் காத்தூன்பீவி பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் இருந்தோர் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பெருங்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து காத்தூன்பீவியின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!