18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தான் படித்த பள்ளி முன்னாள் மாணவர்களின் நல சங்க அலுவலக கட்டடத்தை தனுஷ் குமார் எம்பி திறந்துவைத்தார்.

தான் படித்த பள்ளி முன்னாள் மாணவர்களின் நல சங்க அலுவலக கட்டடத்தை தனுஷ் குமார் எம்பி திறந்துவைத்தார்.

எழுதியவர்: mohan January 28, 2021, 12:27 pm

இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் 1990ஆம் ஆண்டு படித்த பள்ளி மாணவர்கள் அனைவரும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் தேவதானத்தில் பள்ளியின் முன்னாள் மாணவரும் தென்காசி பாரளுமன்ற உறுப்பினருமான தனுஷ் குமார் எம்பி அவர்கள் தலைமையில் ஒன்று கூடி முன்னாள் மாணவர் நலச்சங்கம் சங்கம் ஆரம்பித்தனர் அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி நேற்று (27.01.2021 ) இராஜபாளையம் புகழேந்தி ரோட்டில் முன்னாள் மாணவர்கள் நலச்சங்க அலுவலகத்தை முன்னாள் மாணவரும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினருமான தனுஷ் குமார் எம்பி அவர்கள் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார் அதை தொடர்ந்து நிகழ்விற்கு சங்கத் தலைவர் அருணகிரி துணைத் தலைவர் சுரேந்திரன் பாபு ஆகியோர் தலைமையில் பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், பிச்சிப்பூ , ஆகியோர் முன்னிலை வகித்தனர் முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் முன்னாள் பள்ளி மாணவர்களின் சார்பாக ராஜன் பாபு அருண் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் சங்கத்திற்கு பெரிய அளவிலான குரூப் போட்டோவை தனுஷ் குமார் எம்பி அவர்களிடம் வழங்கினார்கள் சங்கப் பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!